பக்கம் எண் :

தமிழன் இதயம்43

  
  குணமிருந்து பொறுமையுடன் குறையிருந்தார் ஏழைகளைக் குறித்துவாடும்
     மனமிருந்தார் அடைந்திடுமோர் மாட்சிமைக்கு நீயுமொரு சாட்சியானாய்.

கோபால கிருஷ்ண கோகலே
 
  படிப்பெனும் கடலை நீந்திப்
     பணமெனும் ஆசை போக்கிக்
கடிப்புடன் மமதை யென்னும்
     களையிலா தொழுகி நின்று
துடிப்புடன் இந்து தேசத்
     தொண்டனாம் தலைமை பூண்டு
கொடிப்படை யில்லா தாண்டான்
     கோகலே என்னும் வேந்தன்.

ஜாதிமத பேதமெல்லாம் கடந்து நின்றான்
     தனிப்பெரிய குலத்துதித்த தகைமை யுள்ளோன்
மேதினியில் உடன்பிறந்த உயிர்க ளெல்லாம்
     மெலிவின்றிப் பசிநீங்கிக் களிப்ப தொன்றே
ஊதியமாம் எனக்கருதி உழைப்ப தற்கே
     உடலோடு பொருளாவி உதவி நின்றான்
கோதிலான் கோபால கிருஷ்ண னெங்கள்
     கோகலே அவன்பெருமை கூறப் போமோ”

தன்சுகமாம் தன்னாட்டார் சுகமே யென்றும்
     தன்னறிவாம் தன்னாட்டார் அறிவே யென்றும்
தன்பெருமை தன்னாட்டார் பெருமை யென்றும்
     தன்சிறுமை தன்னாட்டார் சிறுமை யென்றும்