பக்கம் எண் :

44நாமக்கல் கவிஞர்

  
  மன்பெரிய சபைதனிலும் மறவா னாகி
     மலைபோல நிலையாகப் பாடுபட்டான்
என்சொலுவோம் கோகலே பெருமை தன்னை
     இறந்தாலும் இறவாதான் இவனே யாவான்.

தருமமும் கருமமெல்லாம் தனித்தனி மறந்து மிக்க
     தரித்திரம் பிணிகளெல்லாம் தங்கியே இங்கு நிற்கப்
பெருநிலக் கிழவியிந்த பேதையாம் இந்து தேசம்
     பலபல துன்பமுற்றுப் பஞ்சையாய் வாடிநிற்க
வெறுமனே யிருந்துநாங்கள் வீணரா யலைந்து கெட்டோம்
     வேண்டினோம் தேசபக்தி விமலனார் எமக்குத் தந்த
பெருமானே கோகலே நீ பின்னையும் பிறந்து வந்து
     பெற்றதாய் இந்துமாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய்.

வ. வே. சு. ஐயர்
 
  தமிழ்மொழியின் பெருமைதன்னை உலகறிய எடுத்தறைந்த
     தனிப்பறையின் பேரோசை தணிந்ததேயோ!
துமியுரைத்த கவியரசன் சுவைவிளக்கக் கம்பனுக்காய்த்
     தூதுவந்த பாதமவை துவண்டவேயோ!
அமிழ்ந்துறங்கும் தமிழர்களை அடிமைஇருள் அகன்றதென
     அழைத்தெழுப்பும் கோழிகுரல் அடைத்ததேயோ!
குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச்
     சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை

சுழிந்தோடி மடுக்கள்மிகும் உலகநடைச்
     சுழல்கள் பல நீந்தி ஏறி
வழிந்தோடும் மலையருவிச் சுழல்விழந்து
     கரையேற மாட்டாய் ஏனோ!