பக்கம் எண் :

46நாமக்கல் கவிஞர்

  

கவி தாகூர்
 
  கலைமகள் கண்ணீர் சோரக்
     கவிமகள் கலங்கி வீழத்
தலைமகன் இறந்தா னென்று
     இந்தியத் தாய்த விக்க
அலைகடற் கப்பா லுள்ள
     அறிஞர்கள் யாரும் ஏங்க
மலைவிளக் கவிந்த தென்ன
     மறைந்தனன் கவிதா கூரே.

சந்திரன் கிரணத்தோடு
     சூரியன் ஒளிசேர்ந் தென்ன
செந்தணல் நெருப்பில் நல்ல
     சிலுசிலுப் பிணைந்த தென்ன
அந்தணர் அமைதியோடே
     அரசரின் ஆண்மை கூட்டும்
சுந்தரக் கவிகள் பாடும் சொல்வள
     முடையோன் தாகூர்.

கருணையின் உருவு காட்டும்
     கவிரவீந் திரநாத் தாகூர்
அருணனாய் உலகுக் கெல்லாம்
     அறிவொளி பரப்பி வாழ்ந்தான்
மருணெறி மாற்ற இந்த
     மாநில மக்கட் கெல்லாம்
பொருணெறி சாந்தி சொல்லும்
     புத்தக மாக நிற்பான்.
அரசியல் போராட்டத்தில்
     ஆழ்ந்திலன் என்றிட்டாலும்
புரைசெயும் அடிமை வாழ்வின்
     புண்ணையே எண்ணி எண்ணி