பக்கம் எண் :

தமிழன் இதயம்49

  
  காடும்மலையும் அதில் கலைவீசும்;
     கடலும் ஞானம்தர அலைவீசும்;
பாடும் தேசிகவி நாயகத்தின்
     பழமை பாடிடஎன் நாஉவக்கும்,

நோய்நொடி யாவையும் விட்டோடி
     நூறு வயதும்சுகக் கட்டோடு
தாய்மொழி வளர்த்தவன் கவிகாணும்
     தனிவரம் தெய்வம் தரவேணும்.
 

 வ. உ. சிதம்பரம் பிள்ளை
 
சிதம்பரம் பிள்ளையென்றுபெயர் சொன்னால்-அங்கே
சுதந்தர தீரம் நிற்கும் கண்முன்னால்
விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும்-நாட்டின்
விடுதலைக் கேயுழைக்கத் திடந்தருமே.
 
(சிதம்)
 
 
அடிமை விலங்கையெல்லாம் அறுத்தெறியும்-நல்ல
ஆற்றல் கொடுக்கும் அவன் சரித்திரமே
கொடுமை பலசகிக்கும் குணம்வருமே-நாம்
கோரும் சுதந்தரத்தை மணந்திடுவோம
 
(சிதம்)
 
 
திலக மகரிஷியின் கதைபாடும்-போது
சிதம்பரம் பிள்ளைவந்து சுதிபோடும்
வலது புயமெனவே அவர்க்குதவி-மிக்க
வாழ்த்துக் குரிமைபெற்றான் பெரும்பதவி.
 
(சிதம்)
 
  திருக்குறள் படித்திட, ஆசைவரின்-புதுச்
சிதம்பரம் பிள்ளைஉரை பேசவரும்
தருக்கிடத் தக்கபெரும் தமிழ்ப்புலமை-கற்றார்
தலைவணங்கிப் புகழும் தனிநிலைமை.