பக்கம் எண் :

52நாமக்கல் கவிஞர்

  
  வெள்ளையன்றி வேறு நிறம் அறியா ஆடை
     வேதாந்த சித்தாந்த ஒளியே வீசும்
கொள்ளை கொள்ளை சிறையிருந்த குறிகள் தோன்றும்
     குலவுபிள்ளைச் சிதம்பரத்தை நினைவு கூர்தல்.
 
 
சுப்ரமண்ய பாரதி
 
  சுப்ரமண்ய பாரதியை நினைத்திட்டாலும்
     சுதந்தரத்தின் ஆவேசம் சுறுக்கென் றேறும்;
இப்ரபஞ்சம் முழுவதும் நமக்கினமாய் எண்ணும்;
      ‘இந்தியன் நான்’ என்றிடும்நல் லிறுமாப் புண்டாம்;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும்;
     எல்லையற்ற உற்சாகம்எழுந்து பொங்கும்
ஒப்பரிய  ‘தமிழன்’ என்ற உவகை ஊறும்;
     உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்கமுண்டாம்,

அச்சமென்னும் பெரும்பேயை அடித்துப் போக்கும்,
     அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும்
துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச்
     சுதந்தரத்தை விட்டுவிடாத் துணிவு தோன்றும்;
கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம்
     கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும்
மெச்சிடுநம் தாய்நாட்டின் நாகரீகம்
     மேன்மையெல்லாம் பாரதியார் பாட்டால்மேவும்.

தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத்
     தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும்
சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத்
     தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணி