பக்கம் எண் :

தமிழன் இதயம்53

  
  தெருத்தெருவாய்த் தேசீயப் பஜனை பாடி
     சென்னையிலும் உணர்ச்சிவரச் செய்த தீரன்
உருத்தெரியா திப்போதும் இங்கே நம்மை
     ஊக்குவதும் பாரதியின் உரைக ளேயாம்.
 
 
  பெண்ணுலகம் புதுமைபெறப் பழமை பேசிப்
     பெருமை யவர் உரிமைகளைப் பெரிதும் போற்றி
மண்ணிலவர் இழிவுபெறச் செய்து வைத்தோர்
     மடமைமிகும் கொடுமைகளை மறுத்துப்பாடி
கண்ணியத்தைப் பிற்காலக் கவிஞர் தம்முள்
     காத்ததுநம் பாரதியின் கவியே யாகும்
எண்ணஎண்ணத் தமிழ்மொழிக்கோர் ஏற்றமாகும்
     பாரதியின் திருநாமம் என்றும் வாழ்க.
 
 
  எங்கேயோ எட்டாத உலகம் தம்மில்
     இருப்பரென நாம் படித்த தெய்வம் எல்லாம்
இங்கேயே எம்முடனே எவரும் காண
     ஏழைமக்கள் குடிசையிலும் இருப்ப தாக்கும்
சிங்காரப் புதுக்கவிகள் பலவும் பாடித்
     தேவரெல்லாம் தமிழ்நாட்டில் திரியச் செய்தோன்
மங்காதாம் பாரதியார் நினைவைப் போற்றி
     மறவாமல் தமிழ்நாட்டார் வாழ்த்த வேண்டும்.
 

பாரதி பாட்டு
 
  அச்சமிகும் பேடிமையின் அடிமை வாழ்வில்
     அடங்கியிருந் தறம்மறந்த தமிழர் நாட்டை
பச்சைமரத் தாணியெனப் பதியும் சொல்லால்
     பாட்டிசைத்துப் பாலர்களும் நிமிர்ந்து நின்று