| நடித்தொழுகித் துதிபாடி நலங்கள் நாடி நரைத்திறந்து மறைந்திடும்நாவலர்போ லன்றி வெடித்தெழுந்த பக்தியொடு பரத நாட்டின் விடுதலைக்குப் பாடுவதே வெறியாய்க் கொண்டு இடித்தெழுந்து தேன்பொழியும் சொற்க ளொடு இளங்கதிரும் முழுமதியும் இணைந்தா லென்னப் பொடித்துடலம் புளகமுற அச்சம் போக்கிப் புகழ் புரியும் பாரதியின் புலமை தானே. | |
| மேனாட்டு புதுமொழிகள் வளர்ந்து நாளும் மிகக்கொழுத்துப் பளபளபத்து மேன்மை மேவ மிக்கசுவைப் பழந்தமிழ்த்தாய் மெலிந்தா ளென்றும் தாய்நாட்டைத் தமிழ்மொழியை மறந்தீர் ஐயோ! தமிழர்களே! தளதளத்து மூச்சுவாங்கித் தலை வணங்கி உடல் சுகித்தீர் தவத்தால் மிக்க வானாட்டுத் தேவர்களும் அறிந்திடாத வளமிகுத்து செழுசெழுத்து வாழ்ந்த நாட்டை வறுமை தரும் அடிமையினில் வைத்தீ ரென்று பாநாட்டிப் பலவழியிற்பாடிப் பாடிப் படித்தவுடன் பதைபதைக்க வீரமூட்டும் பாரதியார் பாடல்களின் பண்தான் என்னே! | |
| பாலொழுகும் சிறுகுதலை மகனைப் பார்த்து “படையெடுத்தார் பகையாளர்; மகனே நீபோய் வேலொழுகும் போர்க்களத்தில் வெல்வாய் அன்றேல் வெம்படையயை மருமத்தில் வாங்கு” என் றேவும் சீலமிகும் பெண்மணிகள் திகழ்ந்த நாட்டைச் சிற்றடிமைக் கொப்பிவிற்றுத் தின்றீ ரென்று தாலுழுது பறைசாற்றித் தமிழ்ப்பா ஓதித் தட்டியெழப் பாரதியார் தாமே செய்தார், | |