பக்கம் எண் :

தமிழன் இதயம்57

  

உ. வே. சாமிநாத ஐயர்
 
  பேச்செல்லாம் தமிழ்மொழியின் பெருமைபேசி
     பெற்றதெல்லாம் தமிழ்த்தாயின் பெற்றியென்று
மூச்செல்லாம் தமிழ்வளர்க்கும் மூச்சே வாங்கி
     முற்றும் அவள் திருப்பணிக்கே மூச்சை விட்டான்
தீச்சொல்லும் சினமறியாச் செம்மை காத்தோன்
     திகழ்சாமி நாதஐயன் சிறப்பை யெல்லாம்
வாய்ச்சொல்லால் புகழ்ந்துவிடப் போதா துண்மை
     மனமாரத் தமிழ்நாட்டார் வணங்கத் தக்கோன்.
 
 
  அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக
     அலைந்தலைந்து ஊரூராய்த் திரிந்து நாடி
செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடி
     சேகரித்துச் செருகலின்றி செப்பம் செய்து
சொல்லரிய துன்பங்கள் பலவும் தாங்கி
     சோர்வறியா துழைத்தஒரு சாமி நாதன்
இல்லையெனில் அவன்பதித்த தமிழ்நூ லெல்லாம்
     இருந்தஇடம் இந்நேரம் தெரிந்தி டாதே.
 
 
  சாதிகுலப் பிறப்புகளாற் பெருமை யில்லை
     சமரசமாம் சன்மார்க்க உணர்ச்சி யோடு
ஓதிஉணர்ந் தொழுக்கமுள்ளோர் உணர்ந்தோர்என்னும்
     உண்மைக்கோர் இலக்கியமா உலகம் போற்ற
ஜோதிமிகும் கவிமழைபோல் பொழிமீனாட்சி
     சுந்தரன்ஆம் தன்குருவைத் தொழுது வாழ்த்தி
வேதியருள் நெறிபிசகாச் சாமிநாதன்
     விரித்துரைக்கும் சரித்திரமே விளங்கிநிற்கும்
 
 
  மால்கொடுத்த பிறமொழிகள் மோகத் தாலே
     மக்களெல்லாம் பெற்றவளை மறந்தார்; ஞானப்
பால்கொடுத்த தமிழ்த்தாயார் மிகவும் நொந்து
     பலமிழந்து நிலைதளர்ந்த பான்மை பார்த்து