| கோல்கொடுத்து மீட்டுமவள் கோயில் சேர்த்து குற்றமற்ற திருப்பணிகள் பலவும் செய்து நூல்கொடுத்த பெருமைபல தேடித் தந்த நோன்பிழைத்த தமிழ்த்தவசி சாமிநாதன். | | பிரார்த்தனை | | உலகெல்லாம் காக்கும் ஒரு தனிப் பொருளே உன்னருள் நோக்கி இன்னு மிங்குள்ளோம்! இந்திய நாட்டை இந்தியர்க் கென்று தந்தனை யிலையோ தவறதில் உண்டோ? காடும் மலைகளும் கனிதரும் சோலைகள் ஓடும் நதிகளும் உள்ளன எவையும் இங்கே பிறந்தவர் எங்களுக் கிலையோ! எங்கோ யாரோ வந்தவர் துய்க்கச் சொந்த நாட்டினில் தோன்றிடும் செல்வம் எந்த நாட்டிலோ எங்கோ போய்விடக் கஞ்சியு மின்றிக் கந்தையும் இன்றி அஞ்சிய வாழ்வின் அடிமையிற் கிடந்து நொந்தனம் கொள்ளை நோய்களாற் செத்துக் காட்டிடை வாழும் விலங்கினும் கேடாய் நாட்டிடை யிருந்தும் நலிந்தனம் ஐயோ! யாருடை நாடு? யாருடை வீடு? யாருடைப் பாடு? யார் அனு பவிப்போர்! பிறந்த நாட்டினிற் பிறவா தவரிடம் இரந்து நின்று அவர் ஏவலே செய்து உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும் ஊனமிவ் வாழ்வினை ஒழிந்திடத் துணிந்தோம். ஞான நாயகா! நல்லருள் சுரந்து, ஆண்மையும் அறிவும் அன்பும் ஆற்றலும் | | |
|
|