பக்கம் எண் :

தமிழன் இதயம்59

  
  கேண்மையும் பிறர்பால் கேடிலா எண்ணமும்
அடிமை ஒருவருக் கொருவர் என்றில்லாக்
குடிமை நீதியின் கோன்முறை கொடுத்து.
சோறும் துணிவும் தேடுவ தொன்றே
கூறும் பிறவின் கொள்கை யென்றின்றி
அளவிலா உன்றன் அருள் விளை யாட்டின்
களவியல் போன்ற கருணையின் பெருக்கின்
உளவினைத் தேடி உணர்ந்திட வென்றே
வளமும் எங்கள் வாழ்நாட் போக்கி
மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய்
எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதீ!
 

31. இந்தியத் தாய் தோத்திரம்
 
 

பல்லவி
 

 
  தாயே வந்தனம் - இந்தியத்
தாயே வந்தனம்
 
 
 

அனுபல்லவி
 

 
  தாரணிதன்னில் வேறில்லை இணையெனப்
பூரண வளந்திகழ் புண்ணிய பூமிஎம்             (தாயே)
 
 
 

சரணம்

 
 
நிலவளம் நீர்வளம் நிறைந்ததுன் நாடு
நீண்ட உன் பரப்பிலும் வேறிலை ஈடு
விலையிலும் விளைவிலும் மலிந்ததுன் தேசம்
வேண்டிய யாவும்உன் எல்லையில் வாசம்.         (தாயே)