| முப்பதும் பத்தும் கோடிஉன் மக்கள் மூவுலகத்தையும் ஆண்டித் தக்கார் அற்புதமாகிய ஆற்றல் நிறைந்தாய் அறியாத் தனத்தால் அடிமையில் இருந்தோம். (தாயே) படை யெடுத்தவரும் பசி யெடுத்தவரும் பற்பல நாட்டார் உனையடுத்தவரை அடைவுடன் அத்தனைப் பெயரையும் தாங்கி ஆதாரித்தாண்டஉன் அருங்குணம் ஓங்க, (தாயே) பாஷைகள் பற்பல படித்தவள் நீயே படித்ததன் பயன்பெறும் நடைத்தையுள் ளாயே ஆசைகள் அகற்றிய அறங்களிற் சிறந்தாய் அன்பின் வழிகள் அனைத்தையும் அறிந்தாய், (தாயே) ஞானமும் கலைகளுக் கிருப்பிடமாவாய் நாகரிகத்தின் பிறப்பிடமாவாய் தானமும் தவங்களைத் தாங்கின துன்கை தருமம் யாவையும் தழைத்தது மிங்கே. (தாயே) மதவெறிக் கொடுமையை மாற்றும்உன் பொறுமை மற்றவர் மதத்தையும் போற்றுமுன் பெருமை சதமெனும் சத்திய சாந்தியை உரைப்பாய் சன்மார்க் கத்தவர் சிந்தையில் இருப்பாய். (தாயே) | | சுதந்தரம் வேண்டும் | | கண்ணொளி யின்றி மற்றக் கட்டழ கிருந்தா லென்னப் பண்ணளி இனிமை யூட்டாப் பாட்டுகள் கேட்ப தென்னப் | | |
|
|