பக்கம் எண் :

தமிழன் இதயம்63

  
  மடமை விட்டது சுதந்தரம்
     மானம் விடாதது சுதந்தரம்
கடமை கற்றது சுதந்தரம்
     கபடம் அற்றது சுதந்தரம்
கொடுமை கண்டு பொறுக்காது
     கொடியர் தமையும் வெறுக்காது
அடிமை செய்து சுகிக்காது
     ஆரையும் அடிமை வகிக்காது.
 
 
கொல்லக் கூசும் சுதந்தரம்
     கொள்கைக் குயிர் தரும் சுதந்தரம்
எல்லை விட்டு நடக்காது
     எதிரியை ஒண்டி மடக்காது
வெல்லற் கேனும் பொய்யாது
     வேற்றுமைக் காரரை வையாது
பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது
     பட்ட தன் தோல்வி ஒளிக்காது.
 
 
தன்சோறுண்பது சுதந்தரம்
     தன் துணி அணிவது சுதந்தரம்
என்னே வறுமை வந்தாலும்
     எத்தனைத் துன்பம் தந்தாலும்
தன்னேர் செம்மை பிரியாது
     தன்குறை சொல்லித் திரியாது
பொன்சேர் போகம் மதிக்காது
     பொய்புகழ் பாடித் துதிக்காது.
 
 
  தாழ உரைப்பது சுதந்தரம்
     தன்மதிப் புள்ளது சுதந்தரம்
ஏழை செல்வனென் றெண்ணாது
     எவருக் கும்குறை பண்ணாது