| ஊழிய னாகப் பணிசெய்யும் உலகுக் கெல்லாம் அணிசெய்யும் வாழிய மக்கள் எல்லோரும் வாழிய வென்றே அதுகோரும். | |
சுகவாழ்வு |
| சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ?- வெறும்சோற்றுக் குயிர் சுமந்(து) இறப்பேனோ! | (சுத) |
| விடுதலை யடையாமல் விடுவேனோ?-என்னை விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ! | (சுத) |
| மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ?-அன்றி மற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ! | (சுத) |
| தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ?-இன்றித் தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ- | (சுத) |
| பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ?-விட்டுப் பாவங்களுக் கொதுங்கிப் பிழைப்பேனோ! | (சுத) |
| ஞான சுதந்தரத்தை அடைவேனோ?-இந்த ஊனுக்குழைத் தடிமை தொடர்வேனோ! | (சுத) |
இச்சா சுதந்தரம் |
| இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்தரம்; பிச்சை கேட்க வேண்டுமோ பிறர் கொடுக்க வல்லதோ? | |