பக்கம் எண் :

66நாமக்கல் கவிஞர்

  

என்னுடை நாடு
 
  “இந்திய நாடிது என்னுடை நாடு”
என்று தினந்தினம் நீயதைப் பாடு
சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள
தூங்கிக் கிடந்தது போனது மாள
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
வாடின கோலங்கள் ஓடின தம்பி
இந்தத் தினமுதல் “இந்திய நாடு
என்னுடை நாடு” என்ற எண்ணத்தைக் கூடு.
 
 
கன்னி இமயக் கடலிடை நாடு
கடவுள் எமக்கெனக் கட்டிய வீடு
என்ன முறையிது ஏனிதை வேறு
இன்னொரு நாட்டவர் ஆள்வது கூறு
சொன்னவர் கேட்டவர் யாரையும் நம்பி
சோர்ந்து கிடந்தது தீர்ந்தது நம்பி
என்னுடை நாட்டினை நானிருந்தாள
இந்தத் தினம்முதல் எண்ணுவன் மீள.
 
 
தன்னுடை வேலையைத் தான்செய்வ தாலே
தப்பு வந்தாலும் சுதந்தரம் மேலே
இன்னொரு யாருக்கும் இதிலென்ன கோபம்
என்றன் உரிமைசொன் னாலென்ன பாபம்
அன்னியர் ஆள்வதில் நன்மை வந்தாலும்
அடிமையின் வாழ்வது நரகம் எந்நாளும்
என்னுடை வீட்டுக்கு நான் அதிகாரி
என்பது தான்சுய ராஜ்ஜிய பேரி.
 
 
பாரத நாடென்றன் பாட்டனின் சொத்து
பட்டயத் துக்கென்ன பஞ்சாயத்து?
யாரிதை வேறொரு அன்னியர் ஆள
அஞ்சிக் கிடந்தது போனது மாள