| ‘வாரவர் போறவர்’ யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ விடுதலை வேண்டுதல் விட்டிடப் போமோ. | |
| ‘முத்தமிழ் நாடென்றன் முன்னையர் நாடு முற்றிலும் சொந்தம் எனக்’கெனப் பாடு சற்றும் உரிமையில் லாதவர் ஆள சரிசரி என்றது போனது மாள பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம் பயப்பட்டு யாருக்கும் பணிந்திடல் செய்யோம் சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நன்றே சடுதியில் விடுதலை அடைவது நன்றே. | |
தேசத்தொண்டு |
பல்லவி |
| தேசத் தொண்டுகள் செய்திடுவோம் தெய்வம் துணைவரக் கை தொழுவோம் | (தே) |
சரணம் |
| நம்முடை நாட்டை நாம் ஆள நன்மைகள் முன்போல் இனிமீள எம்முடை ராஜ்ஜியம் இதுவென்றே இந்தியர் மகிழ்ந்திடச் சொந்தமென்றால். | (தே) |
| பஞ்சக்கொடுமையை ஒழித்திடவும் பாரதநாடினிச் செழித்திடவும் அஞ்சும் அடிமைத்தனம் நீங்கி அன்பின் ஆண்மை வேண்டுமென்றால். | (தே) |