| சத்தியவாழ்வினை நாடுதற்கும் சாந்தப் பெருமைகள் கூடுதற்கும் உத்தமக் காந்தியின் உபதேசம் உலகுக்கோதும் நம்தேசம். | (தே) |
| தாழ்ந்தவரென்பர் இங்கில்லை வரித்திரம் நமக்கினிப் பங்கில்லை வாழ்ந்திடும் வரையிலும் புகழ் செய்வோம் வானிலும் உயர்வாய் வாழ்ந்திடுவோம். | (தே) |
“சுதந்தரமில்லா ஒரு நாடு” |
| சுதந்தரத் திருநாள் தொழுவோம்-நாம் துன்பம் தொலைந்தினி எழுவோம்-ஆம்! நிதந்தரும் தரித்திரம் நீங்கிடுவோம் நீதியும் அறங்களும் ஓங்கிடுவோம். | (சுத) |
| கோயில் குளங்களை இடித்தெறியும் குழந்தைகள் பெண்களைக் கொலைபுரியும் பேயின் கூத்தினைத் தடுத்திடவே பெரிதும் சுதந்தரம் தொடுத்திடுவோம். | (சுத) |
| மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும் முற்றிலும் தருமம் தாழ்வதையும் போக்கிடச் சுதந்தரம் வேண்டிடுவோம் புண்ணிய முறைகளில் ஆண்டிடுவோம். | (சுத) |
| பகைவர்கள் தங்களுக் குபசாரம் பக்தரைச் சிறையிடும் அபசாரம் நகை மிகும் அரசியல் முறை மாற நம்முடைய சுதந்தரம் நிறைவேற. | (சுத) |