| ஆங்கில ஆட்சி இந்திய நாட்டை அடிமைநா டாக்கின தோடு தாங்களே சுகிக்கும் தந்திர முறையால் தரித்திரம் தலைவிரித் தாட ஈங்குள ஏழைக் குடிகளின் வளத்தை ஈப்புலி என்னவே உறிஞ்சி ஓங்கிய செல்வம், அரசியல், ஆன உணர்ச்சியும் கலைகளும் ஒழித்தார். | |
| ஆதலால் இந்த ஆங்கிலத் தொடர்பை அடியோடும் அகற்றிட வேண்டும் பூதலம் அறிந்த பூரண மாம்சுய ராஜ்ஜியம் புதியதா யமைத்து ஏதொரு நாடும் ஆதிக்கமெதுவும் இந்நாட் டெதிலு மில்லாத தீதிலா நிலையை அடைந்திடல் நன்மை திடமுடன் நம்பினோம் இதையே. | |
| அந்த நன்னிலையை அடைந்திட நமக்கு அதிகமாய்ப் பலன்தரும் மார்க்கம் நிந்தனை மிகுந்த கொலைவழி யன்று நிச்சயம் கண்டு கொண்டோமால் முந்திநாம் கொண்ட சாத்விக முறையால் முற்றிலும் முன்னேற்ற மடைந்தோம் இந்தியா இனியும் அதனையே தொடர்ந்து எண்ணிய சுதந்தரம் எய்தும். | |
| உத்தம மான சாந்தநல் வழயில் உரிமையாம் சுதந்தர மடைய நித்தியமான பரம்பொருள் சாட்சி நிபந்தனை சிலவுமேற் கொண்டு | |