| இந்துக்களிடையே தீண்டாத பேர்கள் ஹரிஜன் ஏழைகள் தம்மைப் பந்துக்கள் போலப் பரிவுடன் நடத்தி அவருடன் பழகுதல் வேண்டும்; நிந்தித்து நீக்கல் சாத்திவிக நெறிக்கு நிச்சயம் தடையென நிற்கும்; சிந்தித்து நமது தினசரி வாழ்வில் தீண்டலை மறந்திடல் தேவை. | |
| மதங்களின் பெயரால் மாறுபட் டிடினும் மற்றுநம் சுகதுக்க மெல்லாம் நிதங்கலந் தெல்லா விதத்திலும் பின்னி நீக்கொணாத் தொடர்புகள் உடைத்தாம்; இதங்கலந் திடநாம் இந்தியத் தாயின் மக்களே என்பதை நினைத்து, விதங்களை மறந்து வேற்றுமை துறந்து விரவிநாம் நடத்திடல் வேண்டும், | |
| கதரும் ராட்டையும் கண்களாம் நமக்குக் கருதிடல் நிர்மாணக் கணக்கில்; எதிலும் சுகமிலா ஏழைக் கிராமம் எழு நூறாயிரம், அவற்றில் பதிலும் பேசிடாப் பாமர மக்களின் பட்டினிக் கொடுமையை மாற்றக் கதியதாய் அவர்க்குப் புத்துயிர் கொடுக்கக் கைத்தொழில் ராட்டையும் கதராம். | |
| ஆகையால் நாமும் அனுதினமும் நூற்போம் ஆடையும் கதரன்றி அணியோம் போகமாய்க் கிராமக் கைத்தொழில் செய்த பொருளையே கூடிய மட்டும் | |