| ஓகையால் வாங்கிப் பிறரையும் அதற்கே உதவிடத் தூண்டுவோம் உண்மை; சாகுமோ என்னும் கைத்தொழில் எல்லாம் தழைத்துயிர் பெற்றிடச் செய்வோம். | |
| காங்கிரஸ் கொள்கைக் கட்டளை தம்மைக் கடமையிற் பணிவுடன் காப்போம்; ஓங்கிடும் போது சத்தியப் போரில் உவப்புடன் கலந்துகொள் வதற்கே ஆங்கது கூவி அழைத்ததும் உதவ ஆயத்த மாகவே இருப்போம்; ஈங்கிது எங்கள் சத்தியம் சபதம் இந்தியா சுதந்தரம் பெறவாம். | |
சுதந்தரத் திருநாள் |
| இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள் இன்பம் யாவையும் இனிமேல் தருநாள் செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித் தெய்வம் தொழுவோம் யாவரும் கூடி | |
| அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம்; ‘அடிமை’ என்னும் சொல்லையும் அழித்தோம்; பொன்னையும் சுகத்தையும் செலவழித்தேனும் பூரண சுதந்தரம் அடைந்திட வேணும். | |
| அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும் அன்னை பாரதத் தாய்மனம் குளிரும் துன்பம் யாவையும் தொலைத்திட முடியும் சோற்றுத் தரித்திர மாவது விடியும். | |