| முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில் முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில் மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம் மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம். | |
| எல்லாத் தேகமும் எமக்கினி உறவாம்; எவரும் செய்திடும் நன்றியை மறவோம்; நல்லார் யாரையும் நலமுறக் காப்போம்; நலிப்பவர் யாவரும் நடுங்கிடப் பார்ப்போம். | |
| சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும் பதந்தரும் பலந்தரும் பரமனைக் காணும் பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும். | |
சும்மா கிடைக்குமோ? |
பல்லவி |
| சும்மா கிடைக்குமோ சுதந்தர சுகமது-மனமே! | |
அனுபல்லவி
|
| சுத்தமும் பக்தியும் சத்தியம் இல்லாமல் சூரமும் வீரமும் சொல்லுவ தால்மட்டும் | (சும்மா) |
சரணங்கள்
|
| உழுது பயிரிடாமல் உணவுகள் கிடைக்குமோ? உழைப்பும் களைப்புமின்றி உரிமைகள் அடுக்குமோ? அழுது அழுதுருகி அன்பின் கண்ணீர்பெருக ஆர்வத்தால் அனைவர்க்கும் சேவைகள் செய்யாமல் | (சும்மா) |