பக்கம் எண் :

76நாமக்கல் கவிஞர்

  
  என்னுடைச் சுகங்களில் இம்மியும் குறையாமல்
எல்லாரும் தியாகம் செய்ய இல்லையென் றேசுவேன்,
 ‘சொன்னதைச் செய்வதும் செய்வதே சொல்வதும்’
சுலபமோ நான் அந்தச் சுத்தத்தில் குளிக்காமல்
(சும்மா)
 
ஒற்றுமை பேசுவேன் உடன்கூடி நிற்காமல்
ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு சொல்லுவேன்
கற்ற என் வித்தையைக் காட்டின தேயன்றி
கசிந்து கசிந்துருகிக் காரியம் செய்யாமல்
(சும்மா)
 
சத்தியம் சாந்தமென்பேன் சட்டென் றதைவிடுத்துச்
சரித்திரப் படிஅது சரியன்றென்று சொல்வேன்
வைத்தஎன் கொள்கையில் வைராக்ய மில்லாமல்,
வார்த்தைக்கும் செய்கைக்கும் வேற்றுமை விலகாமல்
(சும்மா)

சுதந்தர சூரிய உதயம்


பல்லவி

  சுதந்தர சூரியன் உதிக்கிற நேரம்
தூங்காதே தமிழா!
(சுதந்)


அனுபல்லவி

  விதம்வித மாகிய புதுமணம் விரிந்திடும்
விண்ஒளி தனில்பல வண்ணங்கள் தெரிந்திடும்
(சுதந்)


சரணங்கள்

  அடிமை கொடுத்த இருள்
ஆசைப்படி நடக்க
கொடுமை விலங்கினங்கள்
கொஞ்சும் பறவைக்குலம்
அகன்றிடப் போகுது
வெளிச்சமும் ஆகுது
குகைகளுக் கோடிடும்
வானத்தில் பாடிடும்
(சுதந்)