| ஒடுக்கும் தரித்திரத்தால் உள்ளவர் முன்னிருந்து நடுக்கும் குளிர்ப் பயமும் நாட்டினில் இச்சைப்படி | உடலும்குறுகிநின்று உளறும் எளியரைப்போல் நம்மை விட்டகன்றிடும் நாம்குடித்தனம் செய்வோம் | (சுதந்) |
| உரிமை சிறிதுமின்றி உழைப்பின்றிச் சுகித்திடும் திரியும் திருடர்பயம் தீனரும் அச்சம் விட்டு | ஊரைப் பறித்து உண்டு ஊனரைப் போல் இருட்டில் தீர்ந்திடும் நேரம் இனி ஆனசு கங்கள் பெறும் | (சுதந்) |
நல்ல சமயம் |
பல்லவி
|
| நல்லசமயமடா-இதை நழுவவிடுவாயோ! | |
அனுபல்லவி |
| நாட்டிற் சுதந்திரம் நாட்டிமனி தருள் தீட்டுந் தீண்டாமையும் தீர்த்து விடுதற்கு | (நல்ல) |
சரணங்கள் |
| காந்தியைப் போல் தலைவர்-எந்தக்-காலத்திற் கிட்டுமடா வாய்ந்த தருணமிதை-நீ-வழுவியி ழப்பாயோ சூழ்ந்திடும் துன்பங்கள்-வீழ்ந்திட நாமினி வாழ்ந்திடவும் மனச்-சாந்தியடையவும் | (நல்ல) |