பக்கம் எண் :

78நாமக்கல் கவிஞர்

  
  வேதம் ஒலிக்குதடா-காந்தி-ஓதும்மொழிகளிலே
கீதை ஜொலிக்குதடா-அவர்-செய்யும் கிரியையெல்லாம்
வேற்று யில்லாமல்-நாட்டின் நலத்தினைப்
போற்றின யாரையும்-கூட்டி உழைத்திட
(நல்ல)
 
பண்டைய காலந்தொட்டு-நம்முள்-பாசம்பிடித்த பல
வண்டை வழக்கங்களை-இனி-வாரியெறிந்துவிட்டு
பக்தி வளர்த்தினிச்-சுத்த வழிகளில்
நத்தி அனைவரும்-ஒத்துச் சுகித்திட (நல்ல)
 
 
உலகப் போக்கு
 
  உலகப்போக்கைப் பாருங்கள்
ஊரைக் காக்கச் சேருங்கள்
கலகப் பேய் புகுந்திடும்
கவலையே மிகுந்திடும்
(உலக)
 
அடிமை வாழ்வு விட்டு நாம்
ஆண்மை வாழ்வு கிட்டினோம்
கடமை யோடு எல்லையைக்
காக்க வேண்டும் அல்லவோ?
(உலக)
 
நாடு முற்றும் நம்மது
நன்மை தீமை நம்மது
வீடு பெண்டு மக்களை
வேறு காக்கத் திக்கு யார்?
(உலக)
 
படை எடுக்கும் யாரையும்
பயமுறுத்து வோரையும்
நடு நடுங்கச் செய்குவோம்
நாட்டை மீட்டு உய்குவோம்
(உலக)