பக்கம் எண் :

தமிழன் இதயம்79

  
  சாந்த வாழ்வை மிஞ்சிடோம்
சாவதற்கும் அஞ்சிடோம்
மாந்தருக்குள் பீதியை
மாற்ற வேண்டும் நீதியால்
(உலக)
 
சண்டையென்று அஞ்சினும்
சரணம் என்று கெஞ்சினும்
மண்டை உள்ள மட்டிலும்
மரணம் நம்மை விட்டதோ
 
(உலக)
 
  ஏழை என்ற போதினும்
என்ன துன்பம் மோதினும்
கோழை என்று வாழ்ந்திடோம்
கொடியருக்குத் தாழ்ந்திடோம்
(உலக)
 
ஊர்கள் தோறும் கூடுவோம்
ஒற்றுமை கொண்டாடுவோம்
சீர் குலைக்க எண்ணுவோர்
சிந்தை நோகப் பண்ணுவோம்
(உலக)
 
வீதிதோறும் காவலாய்
வீடு தோறும் ஏவலாய்
சாதி பேதம் தள்ளுவோம்
சமரசத்தைக் கொள்ளுவோம்
(உலக)
 
அன்னியர்க் கிடங்கொடோம்
அரசை யார்க்கும் இனி விடோம்
மன்ன ராகி ஆளுவோம்
மாநிலத்தில் வாழுவோம்.
(உலக)