ஒரு மருந்து |
| தெய்வத் தனம்மிக்க மானிட ஜென்மம் தீமை வளர்த்துத் திகைப்பதும் என்னே! கையிற் கடுங்கொலைக் கருவிகள் கொண்டு கண்ணில் வெறிகொண்ட பார்வை மருண்டு வெய்யிற் புழுவென்னத் துடி துடிப்போடும் வேதனை பொங்கும் மனம்படும் பாடும் வையத்தில் எங்கும் மனிதர்கள் யாரும் வாழ்க்கையின் இன்பம் இழந்தனர் பாரும் | |
| அன்பிற்கென் றேவந்த மனிதப் பிறப்பு ஆறறி வுள்ளதென் பார்கள் சிறப்பு துன்பத்துக் கேமுற்றும் அறிவைச் செலுத்தி சுட்டு மடிக்கிறார் ஊரைக் கொளுத்தி இன்பம் அடைந்தவர் யாரையும் காணோம் ஏதுக்கு மக்களைக் கொல்லுவர் வீணே என்பத்தை மாற்ற மருந்தென்ன என்று ஏங்குவர் யாரும் அறிஞர்கள் இன்று | |
| கொஞ்சிக் குலாவுதல் மக்கள் மறந்தார் கூடிப் பழகுதல் கூடக் குறைந்தார் அஞ்சி நடுங்கி ஒதுங்குகின் றார்கள் ஆகாயம் பார்த்துப் பதுங்குகின் றார்கள் வஞ்சனை யற்ற வலிமை யில்லாமல் வானத்தில் வந்து எதிர்க்க நில்லாமல் குஞ்சு குழந்தைகள் பெண்களைக் கொல்வார் கோரத்தை வீரத்தின் பேரென்று சொல்வார்! | |
| வாளுக்கு வாளாம், வில்லுக்கு வில்லாம், வகைமிக்க ஆயுதம் தீர்ந்திடில் மல்லாம்! ஆளுக்கு ஆள்நின்று நேருக்கு நேராம் ஆண்மையும் ஆற்றலும் செய்வது போராம் | |