பக்கம் எண் :

86நாமக்கல் கவிஞர்

  
தமிழ்நாடு எது? தமிழன் யார்?
 
  வலைவீச ஆசைதரும் அலைவீசும்
     வயலும்மற்ற வளங்க ளாலே
விலைவாசிக் கவலையின்றி விருந்தோம்ப
     எதிர்பார்க்கும் விருப்பத்தாலோ
 ‘தலைவாசற் கதவினுக்குத் தாழ் பூட்டே
     இல்லாத தமிழ்நாடு’ என்று
பலதேசம் சுற்றிவந்த மகஸ்தனீசும்
     புகழந்துரைத்த பழைய நாடு,

பற்றொழித்த பெரியவரே பகுந்துரைக்கும்
     அரசுமுறை பணிந்து போற்றி
கற்றறிந்த அரசர்களே காவல்செய்த
     சரித்திரமே காணும் நாடு
மல்தெரிந்த வீரனென்று மமதையுள்ள
     மன்னவரை மதிக்கா நாடு
சற்றொருவர் வருந்திடினும் தாம்வருந்தும்
     அரசாண்ட தமிழர் நாடு.

வேங்கடமும் குமரியிடை விரிகடல்சூழ்
     நிலப்பரப்பை வேறாய் ஆண்டு
வாங்குகிற வரிப்பணத்தின் வரையறுக்க
     அரசுமுறை வகுத்த தல்லால்
ஈங்குவட இமயம்வரை இந்தியரின்
     நாகரிகம் ஒன்றே யாகும்
தாங்கள் ஒரு தனியென்று தடைபோட்டுத்
     தருக்கினவர் தமிழர் அல்லர்.

விசைச்சொல்லும் உலகநடை வெவ்வேறு
     நாடுகளில் விரியும் ஞானம்
பசைச்சொல்லும் பலபாஷை அறிவெல்லாம்
     தமிழ்மொழியில் பலக்க வென்றே