தீண்டாமை ஒழிக | | தீண்டாமை யென்கிற தீய வழக்கம் தீரத் தொலைந்திட நாளாச்சு ஆண்டவன் பொதுவென்று நம்பினயாரும் அந்தப் பழியை அகற்றிட வாரும். இந்த வழக்கம் நாளுக்கு நாளாய் இந்துமத்தினை வெட்டுவது வாளாய் நிந்தை மிகுந்து அழிந்திடுமுன்னே நீக்கிடயாரும் எழுந்திடும் இன்னே வேதத்தி லில்லை கீதையில்இல்லை வேறுள்ள சாத்திரம் யாருக்கினி? சாதித்து யாரையும் சண்டாளனென்றிடும் சாத்திரம் சத்தியச் சம்மதமோ? நால்வ ருரைத்ததே வாரத்தி லில்லை நந்தன் குலத்துக்கு நிந்தை சொலல் பால்வரும் ஆழ்வார் பாசுரத் தில்லை பாணர்வளர்ந்ததைக் கோணலெனல். சங்கரர் காசியில் அங்கென்ன சொன்னார் சண்டாள பக்தனும் தம்குருவென்றார் எங்கள் ராமானுஜர் தம்குலமென்றே யாரையுங் கொண்டுடன் கோயிலுட் சென்றார். காட்டொரு வேடனைத் தம்பியென்றெய்தி கழுகிணைத் தந்தை யெனக்கடன் செய்து சேட்டைக் குரங்கையும் தன்னுடன் சேர்த்துச் சீதாபிராமனும் செய்ததைப் பார்த்து | | |
|
|