| கண்ணப்ப னெச்சிலை முக்கண்ண னுண்டார் கண்ணபிரான் கடைநீரையுங் கொண்டார் எண்ணிய பக்தருக் கெளியது தெய்வம் என்பது வேநல்ல இந்துவின்தர்மம். | | ஓட்டடா! | | ஓட்டடா! ஓட்டடா!-நாட்டைவிட்டு ஓட்டடா! தீட்டடா மனிதருக்குள்-தீண்டலென்ற தீமையை தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும் தொட்டுக் கிட்டிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார் சுத்தமேனும் ஜாதியால் தொடப் படாது என்றிடில் தொத்து நோயைக் காட்டிலும் கொடியரென்று சொல்வதோ. நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம் நரக லுண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம் ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞானி மனிதனை அருகிலே வரப்பொ றாமை அறிவிலே பொருந்துமோ? செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை ஜெகமறிந்து கொள்ளு முன்பு, செய்த திந்த நாடடா! | | |
|
|