| முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்? உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய் உணரு கின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம் உயருகின்ற ஜீவருக்குள் நம்மொடொத்த மனிதனை ஒத்திப் போகச் சொல்லுகின்ற(து) ஒத்துக் கொள்ளலாகுமோ? அமல னாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம்; விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால் வேறுஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி? ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும் நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும் பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்? | | |
|
|