பக்கம் எண் :

தமிழன் இதயம்91

  
நானோ சண்டாளன்!
 
  சண்டாளன் என்று விலக்கப்பட்டவனின் வேள்வி  
 
நானோ சண்டாளன்!- சரி
தானே உங்களுக்கு?
 
 


சரணங்கள்

 
 
தாயை இகழந்தவன் சண்டாளன்
     தந்தையை நொந்தவன் சண்டாளன்
தூயவர் நல்லோர் பெரியோரைத்
     தோஷ முரைத்தவன் சண்டாளன்
தீயவை செய்தே பலர் ஏசத்
     தின்றுழல் கின்றவன் சண்டாளன்
ஏவின செய்வேன் குற்றமிலேன்
     எளியவ னானேன் என்பதற்கே
 
(நானோ)
 
  வீட்டை மறந்தவன் சண்டாளன்
     வேசியர்க் கலைபவன் சண்டாளன்
நாட்டைக் காட்டிக் கொடுத்ததனால்
     லாப மடைந்தவன் சண்டாளன்
பாட்டைத் தனிவழி வந்தோரைப்
     பதுங்கி யடிப்பவன் சண்டாளன்
ஓட்டைக் குடிசையில் வாழ்கின்றேன்
     ஒரு சிறு பாபமும் அறியாத
(நானோ)

 

நன்றி மறந்தவன் சண்டாளன்
     நயமுரை வஞ்சகன் சண்டாளன்
கொன்று சுகித்தவன் சண்டாளன்
     கோப மிகுந்தவன் சண்டாளன்