பக்கம் எண் :

தமிழன் இதயம்93

  
  வட்டி பெருக்கி ஏழைகளின்
     வாழ்வு கெடுத்தவன் சண்டாளன்
பட்டினி எளியவர் ஆசையுடன்
     பார்த்திட உண்பவன் சண்டாளன்
ஒட்டிய வழக்கில் பணத்திற்காய்
     ஓரஞ் சொன்னவன் சண்டாளன்
அட்டியில்லாமல் சொன்னதெல்லாம்
     அடியேன் கேட்டேன் அதற்கா
(நானோ)
 
தானங் கொடுப்பதைத் தடுப்போனும்
     தவத்தைப் பழிப்பவன் சண்டாளன்
மானங் கெடுத்தவர் சோறுண்டு
     வயிறு வளர்ப்பவன் சண்டாளன்
கானுங் கரடும் உங்களுக்காய்க்
     கல்லிலும் முள்ளிலும் பாடு பாடும்
ஏனிங் கென்னைச் `சண்டாளன்ழு
     என்பது? சரியோ உங்களுக்கே
(நானோ)
 
தமிழன் பாட்டு
 
 
 

பல்லவி

 
  தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
(தமிழ)
 


சரணங்கள்

 
 
அமுதமூறும் அன்புகொண்டு
     அரசு செய்த நாட்டிலே
அடிமையென்று பிறர் நகைக்க
     முடிவணங்கி நிற்பதோ!