பக்கம் எண் :

94நாமக்கல் கவிஞர்

  
  இமயம் தொட்டுக் குமரி மட்டும்
     இசை பரந்த மக்கள் நாம்
இனியும் அந்தப் பெருமைகொள்ள
     ஏற்றயாவும் செய்குவோம்
(தமிழ)
 
குஞ்சைக் காக்கும் கோழிபோலக்
     குடியைக்காத்த மன்னர்கள்
கோல்நடத்த அச்சமின்றி
     மேல்நினைப்புக் கொண்டுநாம்
பஞ்சபூத தத்துவங்கள்
     பக்தியோடு முக்தியைப்
பார் சிறக்கச் சொன்னநாமும்
     சீர்குலைந்து போவதோ.
(தமிழ)
 
உலகிலெங்கும் இணையிலாத
     உண்மைபாடும் புலவர்கள்
உணர்ச்சி தன்னை வானைத் தாண்டி
     உயரச் செய்யும் நாவலர்
கலகமற்றுக் களிசிறக்க
     கவிதை சொன்ன நாட்டிலே
கைகுவித்துப் பொய்கள் பாடிக்
     காலந்தள்ளல் ஆகுமோ.
(தமிழ)
 
கங்கையோடு பெருமை கொண்ட
     காவிரிப் பொன்னாட்டிலே
கவலையின் றிச் சோறிருக்கக்
     கலைகளெண்ணி வாழ்ந்தநாம்
மங்கி மங்கி வறுமைமிஞ்ச
     மதிமயங்கி மாய்வதோ!
மானிலத்தில் சோற்றுப் பஞ்சம்
     மறையுமாறு மாற்றுவோம்.
(தமிழ)