பக்கம் எண் :

தமிழன் இதயம்95

  
  சித்திரத்தில் மிக உயர்ந்த
     சிற்பநூலின் அற்புதம்
சின்னச்சின்ன ஊரிற்கூட
     இன்னுமெங்கும் காணலாம்
கைத்திறத்தில் ஈடிலாத
     கல்விதந்த தமிழர்நாம்
கைநெறித்து வேலையின்றிக்
     கண்கலங்கி நிற்பதேன்?
(தமிழ)
 
எண்ணமற்ற விசனமற்று
     எங்கும் செல்வம் பொங்கவே
எந்தநாளும் ஆடல்பாடல்
     எழிலரங்கம் ஓவியம்
பண்ணமைந்த குழலும் யாழும்
     பக்கமேளம் யாவையும்
பாருக்கீந்து மகிழ்ச்சியின்றி
     நாமிருத்தல் பான்மையோ
(தமிழ)
 
விண்மறைக்கும் கோபுரங்கள்
     வினைமறக்கும் கோயில்கள்
வேறுஎந்த நாட்டிலுண்டு
     வேலையின் விசித்திரம்
கண்ணிறைந்த காவணங்கள்
     கனிகள் மிக்க சோலைகள்
கண்டபோது பண்டையெங்கள்
     நாகரீகம் காட்டுமே.
(தமிழ)
 
மனிதவாழ்வில் இன்பமென்று
     சொல்லுகின்ற யாவையும்
மற்றவாழ்வில் உதவுமென்று
     நம்புகின்ற ஞானமும்