| தனிமையான முறையில் யார்க்கும் தந்ததிந்தத் தமிழகம் தட்டிடாது தெய்வமின்னும் கிட்டிநம்மைக் காக்குமே. | (தமிழ) | இளந் தமிழருக்கு | | இளந்தமிழா! உன்னைக்காண இன்பமிக்குப் பெருகுது இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் சற்றுக்குறையுது வளந்திகழும் வடிவினோடும் வலிமை பேசி வந்தனை வறுமைமிக்க அடிமைநீக்க வந்த ஊக்கம் கண்டு நான் தளர்ந்திருந்த சோகம் விட்டுத் தைரியங்கொண் டேனடா தமிழர் நாட்டின் மேன்மைமீளத் தக்ககாலம் வந்ததோ! குளிர்ந்த என்றன் உள்ளம்போல குறைவிலாது நின்று நீ குற்றமற்ற சேவை செய்து கொற்றமோங்கி வாழ்குவாய். பண்டிருந்த சேரர்சோழர் பாண்டிமன்னர் நினைவெலாம் பாயுதடா உன்னையின்று பார்க்கும்போது நெஞ்சினில் | | |
|
|