பக்கம் எண் :

98நாமக்கல் கவிஞர்

  
  பணமிருந்தார் என்பதற்காய்ப்
     பணிந்திடாத மேன்மையும்
பயமுறுத்தல் என்பதற்கே
     பயந்திடாத பான்மையும்
குணமிருந்தார் யாவரேனும்
     போற்றுகின்ற கொள்கையும்
குற்றமுள்ளார் யாரென்றாலும்
     இடித்துக் கூறும் தீரமும்

இனமிருந்தார் ஏழையென்று
     கைவிடாத ஏற்றமும்
இழிகுலத்தார் என்று சொல்லி
     இகழ்ந்திடாமல் எவரையும்
மனமிகுந்தே இனிமைவேண்டும்
     தமிழ்மொழியால் ஓதிநீ
மாநிலத்தில் எவருங்கண்டு
     மகிழுமாறு சேவைசெய்.

ஓடிஓடி நாட்டிலெங்கும்
     உண்மையைப் பரப்புவாய்
ஊனமான அடிமைவாழ்வை
     உதறித்தள்ள ஓதுவாய்
வாடிவாடி அறம்மறந்து
     வறுமைப்பட்ட தமிழரை
வாய்மையோடு தூய்மைகாட்டும்
     வலிமை கொள்ளச் செய்குவாய்.

கூடிக்கூடிக் கதைகள் பேசிச்
     செய்கையற்ற யாரையும்
குப்பையோடு தள்ளிவிட்டுக்
     கொள்கையோடு நின்று நீ