| பாடிப் பாடித் தமிழின் ஓசை உலகமெங்கும் பரவவே பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப் பணியுமாறு சேவைசெய். தமிழனென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா தரணியெங்கும் இணையிலா உன் சரிதைகொண்டு சொல்லடா அமிழ்தமென்ற தமிழனோசை அண்ட முட்ட உலகெலாம் அகிலதேச மக்களுங்கண் டாசைகொள்ளச் செய்துமேல் கமழ்மணத்தின் தமிழில்மற்ற நாட்டிலுள்ள கலையெல்லாம் கட்டிவந்து தமிழர்வீட்டில் கதவிடித்துக் கொட்டியே நமது சொந்தம் இந்தநாடு நானிலத்தில் மீளவும் நல்ல வாழ்வு கொள்ளச் சேவை செய்துவாழ்க நீண்டநாள். | | தமிழரின் பெருமை | | தமிழா! உனக்கிது தருணம் வாய்த்தது தரணிக்கெல்லாம் வழிகாட்ட 'அமுதாம் என்மொழி அறமே என்வழி அன்பே உயிர்நிலை' என்று சொல்லும் | (தமிழா!) | |
|
|