பக்கம் எண் :

10சாமி சிதம்பரனார்

வள

வள்ளுவனார் முப்பால் மொழி

(நாகன் தேவனார்)

வள்ளுவனார் முப்பாலை

(கோதமனார்)

வள்ளுவனார் முப்பாலின்

(முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்)

முப்பால் மொழிந்த முதற்பாவலர்

(ஆசிரியர் நல்லந்துவனார்)

முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்

(கீரந்தையார்)

வள்ளுவர்தாம் செப்பவரு முப்பாற்கு

(பாரதம் பாடிய பெருந்தேவனார்)

பிணக்கிலா, வள்ளுவர் வாய்மொழி முப்பால்

(உருத்திரசன்ம கண்ணர்)

திருவள்ளுவர்,குறள் வெண்பாவில் சிறந்திடு முப்பால்

(உறையூர் முதுகூத்தனார்)

முப்பாலின் ஓதும், தருமம் முதல் நான்கும்

(களத்தூர் கிழார்)

வள்ளுவர் முப்பால்

(அக்காரக்கனி நச்சுமனார்)

முப்பாலில் தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறள்

(தேனீக்குடிக் கீரனார்)

வண்தமிழின் முப்பால்

(ஆலங்குடி வங்கனார்)

இவைகள் திருவள்ளுவ மாலையில் காண்பவை. இவ்வாறு பதினைந்து
புலவர்கள் திருக்குறளை முப்பால் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதலால்
முப்பால் என்பது திருக்குறளே என்பது உறுதி. திருக்குறள் சங்க காலத்திற்குப்
பின் பிறந்தது என்பதனால் அதன் பெருமை குன்றிவிடாது.