பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்101

நாய்கள்

இவ்வாசிரியர் ஒழுக்கமற்றவர்களின் மேல் காய்ந்து விழுகிறார்.
ஒழுக்கமற்றவன் மனிதனே அல்லன்; அவனும் சரி; நாயும் சரி; என்பதே
இவர் கொள்கை.

‘‘நாண்இலன் நாய், நன்கு நள்ளாதவன் நாய், பெரியார்ப்
பேணிலன் நாய், பிறர் சேவகன் நாய்-ஏண்இல்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்
பருத்தி பகர்வுழி நாய்.
 

வெட்கங்கெட்டவன் நாய்; பிறரோடு நன்றாக நட்பு கொள்ளாதவன்
நாய்; பெரியார்களைப் பாதுகாக்காதவன் நாய்; பிறருடைய பணியாளனாய்
இருந்து வயிறு வளர்க்கின்றவன் நாய்; அழகற்ற ஆபரணங்களை அணிந்த
பரத்தையர் சேரியிலே பணமில்லாமல் திரிகின்றவன் பருத்தி விற்பனை
செய்யும் இடத்திலே அலைந்து கொண்டிருக்கும் நாய்’’               (பா.88)

ஒழுக்கமற்றவனை நாயைப் போன்றவன் என்று கூடச் சொல்லவில்லை.
இவ்வாசிரியர். நாய்தான் என்று உருவகமாகவே உரைத்துவிட்டார்; இதனால்
ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கிறார் இவ்வாசிரியர் என்பதைக்
காணலாம்.

மனைவியின் கடமை

இல்லாளின் கடமையைப் பற்றி இவ்வாசிரியர் கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது. குடும்பத்தை நடத்தும் பொறுப்பு முழுவதும் பெண்களைச்
சேர்ந்தது என்ற கருத்தையே இவர் வலியுறுத்துகிறார்.


‘‘வருவாய்க்குத் தக்க வழக்கு அறிந்து, சுற்றம்
வெருவாமை வீழ்ந்து, விருந்து ஓம்பித்-திரு ஆக்கும்