பக்கம் எண் :

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்103

New Page 1

செந்தமிழ் நூல்களைக் கல்லாதான் கவி இயற்றுவதை நாவிலே வைத்து
ஆராய்ந்தால் சிரிப்புக்கு இடமாகும்’’.

தங்கள் பழம் பெருமையைப் பற்றிப் பிதற்றுகின்றவர்கள்; தங்கள்
அழகைத் தாமே வியந்துகொள்ளுகின்றவர்கள்; இவ்விருவரும் இரண்டு
கால்களைக் கொண்ட எருதுகளாம்.
 

  ‘‘துன்பம் இலேம் பண்டு, யாமே வனப்புடையேம்
என்பார் இருகால் எருது
 

முன்பு துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்தோம்; நாங்கள் தாம் அழகிலே
சிறந்தவர்கள்; என்று சொல்லிக்கொள்ளுவோர் இரண்டுகால் எருதுகள்’’

(பா.20)

உழவுத் தொழில் செய்கின்றவன், தன் கீழ் வேலை பார்க்கும்
உழவனுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும்; அவனுடன் பகைத்துக்
கொள்ளக்கூடாது; பகைத்துக் கொண்டால் விவசாயம் பாழ்படும்; வருமானம்
குறையும்; என்று அறிவுரை கூறுகின்து இந்நூல்.
 

  ‘‘தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும்
உழுமகற்குக் கேடு என்று உரை.
 

வேலை செய்யும் தொழிலாளியுடன் பகைத்துக் கொண்டால் அதனால்
தொழிலாளிக்குக் கெடுதியில்லை. உழுவிப்போனாகிய நிலக்காரனுக்குத்தான்
கெடுதி என்று தெரிந்து கொள்’’ (பா.50) நிலச் சொந்தக்காரர்கள் இந்த
உண்மையை உணர்ந்திருப்பார்களாயின் உற்பத்தி குறையாது; விவசாயிகளும்,
நிலக்காரர்களும் இன்புற்று வாழ்வார்கள்.

சென்னை போன்ற நகரங்களிலே ஒரு அதிசயத்தைக் காணலாம். பால்
கறப்பவர்கள் தங்கள் தோளிலே தோலால் செய்த கன்றுக்குட்டியைச் சுமந்து
கொண்டு வருவார்கள். அவர்கள் பின்னே மாடு வந்துகொண்டிருக்கும்.
பின்னே வரும் மாடு, பால்காரனுடைய தோளிலேயுள்ள