பக்கம் எண் :

104சாமி சிதம்பரனார்

New Page 1

வைக்கோல் திணிக்கப்பட்ட அந்தக் கன்றைத் தன் கன்றாகவே
நினைத்துக்கொண்டு வரும். கன்று உயிரோடிருந்தால், பால் வீணாகும்
எனபதற்காகவே, பால்காரர்கள் இப்படிச் செய்கின்றனர். காசுக்கு

ஆசைப்பட்டுக் கன்றைக் கொன்று விடுகின்றனர். இந்த மாபாதகச் செயல்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் இருந்ததென்று
இந்நூலால் தெரிகின்றது. ‘‘தோல்கன்று காட்டிக் கறவார்’’       (பா.84)
என்பதனால் இதனைக் காணலாம்.

நம்பிக்கைகள்

கடவுளால் சொல்லப்பட்ட நூல்கள் முதல் நூல்கள்; அந்நூல்களில்
கூறப்படும் அறங்களைப் பின்பற்றி நடப்பவனே தவசியாவான்.      (பா.8)

ஒருவர்க்காகப் பரிந்து பொய்ச்சாட்சி சொல்லுகின்றவர்களுடைய நாக்கு
அறுந்துவிடும். ஆதலால் பொய்ச் சான்று கூறுதல் தீமை       (பா.10)

பெண் இன்பத்தை விரும்பாத பிரமச்சாரியே சிறந்த ஆசிரியன்
ஆவான்.                                                                                       (பா.29)

தவம் புரிவதால் சுவர்க்கம் பெறலாம்; ஞானத்தால் வீடு பெறலாம்

(பா.36)

நாள், முகூர்த்தம், கிரகம், யோகம் இவைகளைப் பார்த்து, இவைகளின்
பலனையும் அறிந்து, திருமணம் முதலிய நல்ல காரியங்களைச்
செய்யவேண்டும்.

(பா.44)

குடிப்பதற்கு நீர், தங்குவதற்கு நிழல், இருப்பதற்கு இடம், உண்பதற்கு
உணவு, ஆகியவைகளைக் கொடுப்போரும், அன்னசாலை அமைப்போரும்
பேரின்பத்தை அடைவார்கள்.                                                                    (பா.63)