முன் பிறப்பிலே, மற்றவர்களுடைய தலைநோய், பைத்தியம்,
வாய்ப்புற்று,
க்ஷயநோய்,
மூலநோய் இவைகளைத் தீர்த்தவர்களே
இப்பிறப்பில் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள்.
(பா.76)
பஞ்சகாலத்தில் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத்தானும் உண்பவன்; தன்
செல்வத்தால்
பிறர்க்கு உதவி செய்கின்றவன்; போர்க்களத்திலே அஞ்சாமல்
நின்று, பகைவர்களை
அழித்துத் தன் படையைக் காப்பவன்; ஒவ்வொரு நாளும்
பிறருக்கு உணவிட்ட பின்பே
தான் உண்பவன்; பசியால் வாடும்
குழந்தைகளுக்கு உணவளிப்பவன்; ஆகிய இந்த ஐவரும்
எண்பது வயதுக்கு
மேலும் உயிர் வாழ்வார்கள்.
(பா.79)
இவை போன்ற இன்னும்
பல கருத்துக்கள் இந்நூலிலே
காணப்படுக்கின்றன.
திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றை இந்நூல்
வெண்பாக்களிலே
பார்க்கலாம்.
சிறுபஞ்ச மூலம் முழுவதையும் படிப்போர்
அவற்றைக் காணலாம்.
புலால் உண்ணாமையைப் பற்றிப் பல பாடல்களில் கூறப்படுகின்றன.
புலால் உண்ணாதவர்கள்தாம்
சுவர்க்கம் பெறுவார்கள்; மோட்சம்
பெறுவார்கள் என்று
கூறுகின்றன.
கொலை செய்வது கூடாது; கள்ளுண்டல் தீது; பொய் புகலக்கூடாது;
சூதாடுவதால் கெடுதியுண்டாகும்;
என்ற நீதிகள் பல பாடல்களிலே
காணப்படுகின்றன.
வேசையர் நட்பை வெறுக்கவேண்டும்; பிறர் மனைவியை விரும்புதல்
கூடாது. பெண்கள் கற்புள்ளவர்களாய்
வாழவேண்டும்; என்ற அறங்களையும்
பல
பாடல்களிலே காணலாம்.
துறவிகள் ஒழுக்கமுடன் நடந்துகொள்ளவேண்டும்; ஞான நெறியைப்
பின்பற்றி நடக்கவேண்டும். சடைமுடி
போன்ற
|