ஒழுக்கத்திலே சிறந்து,
நூலறிவு பெற்று, தன் நாட்டு நிலைமையையும்
அந்நிய நாட்டு நிலைமையையும் ஆராயத்தக்க அறிவு
நிறைந்திருக்கவேண்டும்.
பார்த்தவர்கள் உள்ளத்தைக் கவரத்தக்க - மற்றவர்கள் கண்டவுடனேயே
மதிக்கத்தக்க
- அழகிய தோற்றம் வேண்டும்.
பகைவர்க்குப் பயந்து நடுங்காமல், உண்மையை எடுத்துக்கூறி
வழக்கிடத்தக்க
அஞ்சாமைக் குணம் அமைந்திருக்கவேண்டும்.
சிறந்த கல்வி - அதாவது பல துறைகளைப் பற்றியும் படித்து -
அவைகளைப் பற்றித்
தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கும் கல்வியும்
வேண்டும்.
அன்பர்கள் பகைவர்கள் அனைவர் உள்ளத்தைக் கவரும்படியும், எதிரிகள்
பதில்
கூறுவதற்கு அஞ்சும்படியும் ஆணித்தரமாகக் காரண காரியங்களை
விளக்கிப் பேசும்
சொல்வன்மையும் வேண்டும்.
இன்ன காலத்தில் இன்ன காரியத்தைச் செய்தால் வெற்றி பெறலாம்; இன்ன
சமயத்தில்தான் இன்ன காரியத்தைச் செய்யவேண்டும்; என்று
துணிந்து காலமறியும்
குணம்வேண்டும்.
இத்தகைய ஆறு குணங்களும்
அமைந்தவர்களே தூதராவதற்குத்
தக்கவர்கள். தூதுவர்க்கு இத்தகுதி இன்றும்
ஏற்றனவாயிருப்பதைக் காணலாம்.
தமிழர்கள் அந்நிய
|