கையை ஊன்றி உடம்பை மேலே தூக்குவதாகிய தண்டால், கை
கால்களை
முடக்கியிருத்தலாகிய ஆசனம், நிமிர்ந்து
நிற்றல், தலைகீழாக
நிற்றல், படுத்துச்
செய்யும் பயிற்சி, குதித்தல், இவைகள்
உடற்பயிற்சிகளாகும்.
இவைகளின்
சிறப்பைக் கூறவேண்டுமானால்,
பெரியோர்கள் உடம்பில் உயிர் அமைதியோடு
வாழ்வதற்கான தொழில்கள் என்று, இவைகளையே வேறு வேறு
தொழில்களாகத்
தனித்தனியே கூறினார்கள்’’ (பா.69)
இச்செய்யுளைக்கொண்டு
தமிழர்கள்
நெடுங்காலாமாக உடற்பயிற்சி செய்து வந்தனர்; அதைச்
சிறந்ததாக
எண்ணி
வந்தனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
உதவி பெறுவதற்கு உரியவர்கள்
இந்நூலிலே இன்னின்னார்க்கு
உதவி செய்யவேண்டும் என்பதைப்பற்றி
விரிவாகக் கூறப்படுகின்றது. இதைப் பல பாடல்களிலே காணலாம்.
தமிழர்களின்
இரக்க சிந்தையை இவைகளின் மூலம் அறியலாம். சிறப்பாக,
35, 36, 52, 53,
54,
55, 56, 57, 71, 78, 80, ஆகிய பதினோரு
பாடல்கள்
உதவி
|