பெறுவதற்கு உரியவர்கள் யாவர் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.
‘‘அநாதைகள், வலிமையற்றவர்கள், சிறுவர்கள், வீடற்றவர்கள், கண்
இல்லாதவர்கள்,
செல்வமற்றவர்கள், உணவுப்பொருள் இல்லாதவர்கள்,
கடன்பட்டுச்
செல்வத்தையிழந்தவர்கள், கால் முடம் பட்டவர்கள், சம்பாதிக்க
முடியாத முதியவர்கள்,
தம்மைத் தாம் காத்துக் கொள்ளும்
வலிமையற்றவர்கள்,
பிள்ளைபெறும் பெண்கள்,
கர்ப்பிணிகள், பித்தர்கள்,
வாதநோய்க்கார்கள்,
விலங்கிடப்பட்டவர்கள், உணவு பெறாமல்
திண்டாடுகின்றவர்கள், வழி
நடப்போர், சுமைதூக்கிச் செல்வோர்,
நோயாளிகள், தாயற்ற
பிள்ளைகள், கணவனையிழந்த பெண்கள்,
வியாபாரத்தால் செல்வம் இழந்து
வருந்துகிறவர்கள், இவர்களுக்கெல்லாம்
உணவளிக்கவேண்டும்; உதவி செய்ய
வேண்டும்;
இப்படிச் செய்வதே
செல்வர்களின் கடமை’’ என்று
அப்பாடல்களிலே காணப்படுகின்றன.
புத்திரர்கள்
புத்திரர்கள் பன்னிரண்டு வகைப்படுவர் என்று இவ்வாசிரியர
கூறுகின்றார்.
இது தமிழ்
நூல்களில் காணப்படாதவை. வடமொழி
ஸ்மிருதிகளில் உள்ள
முறையையே இவ்வாசிரியர்
எடுத்துக் கூறுகின்றார்
என்றுதான் முடிவு செய்ய
வேண்டும். 30, 31 ஆகிய இரண்டு
வெண்பாக்களில் இந்தப் புத்திரர்கள்
பன்னிரண்டு வகையினரின் பெயர்களும்
காணப்படுகின்றன. அப்பெயர்கள்
எல்லாம் வடமொழிச் சொற்கள்.
ஒளரதன், கேத்திரசன்,
கானீனன், கூடன், கிரீதன், பௌநற்பவன்,
தத்தன்,
சகோடன், கிருத்திரமன், பத்திரிபுத்திரன்,
|