அபவித்தன், உபகிருதன்; என்பவைகளே அப்பன்னிரண்டு பெயர்கள்.
கணவனுக்குப் பிறந்தவன் ஒளரதன், கணவன் இருக்கும்போது
மற்றொருவனுக்குப்
பிறந்தவன் கேத்திரன். திருமணம் ஆகாத பெண்ணுக்குப்
பிறந்தவன் கானீன். விபசாரத்திலே
பிறந்தவன் கூடன். விலைக்கு
வாங்கப்பட்டவன் கிரீதன், கணவன் இறந்தபின் மறுமணம்
புரிந்துகொண்ட
இரண்டாம் கணவனுக்குப் பிறந்தவன் பௌநற்பவன், சுவீகாரம்
எடுத்துக்கொள்ளப்பட்டவன் தத்தன். கல்யாணம் செய்துகொள்ளும்போதே
கர்ப்பத்திலிருந்து
பிறந்தவன் சகோடன். கண்டெடுத்து வளர்க்கப்பட்டவன்
கிருத்திரமன், மகள் வயிற்றுப்
பிள்ளை புத்திரிபுத்தரன். பெற்றவர்களால்
கைவிடப்பட்டு மற்றவரால் வளர்க்கப்பட்டவன்
அபவித்தன். காணிக்கையாக
வந்தவன் கிருதன்.
இவர்கள் அனைவரும் புத்திரர்கள் ஆவார்கள் என்று
கூறப்பட்டுள்ளது.
இச்செய்தி பண்டைக்கால மக்களின்
நாகரிகத்தைக் காண
இடந்தருகின்றது.
மக்கள் தொகை குறைந்திருந்த அக்காலத்திலே,
எந்த
வகையிலே பிள்ளைகள்
பிறந்தாலும், அவைகளைக் குற்றம் என்று
கடியவில்லை.
புத்திரர்களாகவே
ஏற்றுக் கொண்டனர். மக்கள் எண்ணிக்கை
வளரவேண்டும் என்பதே
அவர்கள்
கருத்து.
விருந்தோம்பல்
விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்பாடு. விருந்தினர் என்பவர்
முன்பின் அறியாத புதியவர்கள். எந்நாட்டினராயினும்
எம்மொழியின
ராயினும்
நட்புகொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு
தேடி வருவார்களாயின்
அவர்களை
வரவேற்பார்கள் தமிழர்கள். விருந்தினரை வரவேற்று
உபசரிப்பவர்கள் தாம்
|