மென்மையான சொல்லையும்,
மயிற்பீலியின் அடியை ஒத்த கூர்மையும்
வெண்மையும் அமைந்த பற்களையும் உடைய பெண்ணே! விருந்தினராக
வருகின்றவர்கள் அனைவரிடமும் இனிய சொற்களையே பேசவேண்டும்;
அவர்களுடன் உள்ளம் கலந்து உறவாடவேண்டும்;
தங்குவதற்கு வசதியான
இடம் கொடுக்கவேண்டும்; ஆடை அணி முதலியவைகளையும் அளிக்க
வேண்டும்; இனிய
உணவும் இடவேண்டும்; கடுஞ்சொல்லற்ற இனிய
மொழிகளையே எந்நாளும் பேசவேண்டும்; இவ்வாறு விருந்தினர்களை
உபசரிப்பவனைத் தேவர்கள் தமது விருந்தினனாக ஏற்றுக்
கொள்வார்கள்’’. (பா.7)
இச்செய்யுள் விருந்தினர்க்குச்
செய்ய வேண்டிய கடமைகள்
இன்னின்னவை
என்பதை எடுத்துரைத்தது.
கள்ளருந்துவது ஒழுக்கக்கேடான
செயல்; புலால் உண்ணுவதைக்
கைவிடவேண்டும்; கொல்லா விரதத்தை மேற்கொள்ளவேண்டும்;
கொலை
செய்வாருடன் கூட்டுறவே
கூடாது;
இக்கருத்து பல பாடல்களிலே
காணப்படுகின்றன. பெண்டிர்
சொல்வதைப்
பின்பற்றக் கூடாது. அவர்களிடம்
இரகசியங்களை
வெளியிடக்கூடாது.
என்று உரைக்கின்றது ஒரு செய்யுள்.
|