சொல்லிய ஆசார
வித்து.
பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்; அறியாமை
காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப்
பொறுத்துக்கொள்வது; யாரிடமும்
கடுஞ்சொற் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்; எந்த
உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்; சிறந்த
கல்வியை
மறக்காமல் கற்றல்;
உலக நடையை அறிந்து அதைத் தவறாமல்
பின்பற்றுவது;
எதைப்பற்றியும் தானே சிந்தித்து உண்மை
காணும்
அறிவுடைமை; கல்வி,
அறிவு, நல்லொழுக்கமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து
வாழ்தல்; ஆகிய
இந்த
எட்டுக் குணங்களும் நல்லொழுக்கத்தை வளரச்
செய்யும் விதைகளாகும்.’’
(பா.1)
இந்த எட்டுப் பண்புகளையும் பெற்றவர்கள் எந்நாளும் சிறந்து
வாழ்வார்கள். இது
எக்காலத்திற்கும்
ஏற்ற உண்மையாகும்.
ஒன்றையும் விடவில்லை
காலையில் எழுந்தது
முதல் இரவில் படுக்கையில் படுப்பது வரையில்
என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்நூல் கட்டளையிடுகிறது.
பல்
விளக்குவது எப்படி? வெளிக்குப்போவது எப்படி? குளிப்பது எப்படி?
உடுத்துவது எப்படி? உண்பது எப்படி? படிப்பது எப்படி? யார்
யாருக்கு
|