‘‘உண்ணும்போது இனிப்பான பண்டங்களை முதலில் உண்க; கசப்பான
கறிகளை
இறுதியில்
உண்க; ஏனைய
சுவையுள்ள பண்டங்களை இடையில்
உண்க’’
(பா.25)
என்று சாப்பாட்டைப் பற்றி உத்தரவு போடுகிறது ஒரு செய்யுள்.
காலையிலே எழுந்தவுடன், வீட்டு வேலையை எந்த முறைப்படி
செய்யவேண்டும் என்று
கட்டளையிடுகிறது
ஒரு செய்யுள்.
‘‘காலையிலேயே
துயில் எழவேண்டும்; வீடு விளங்கும்படி வீட்டைக்
கூட்டிச் சுத்தம் பண்ணவேண்டும்; பாத்திரங்களைத்
துலக்கவேண்டும்;
பசுவின்
சிறுநீரைத் தெளித்து வீட்டைப் புனிதமாக்க
வேண்டும்; தண்ணீர்ச்
சாலுக்கும்,
குடத்துக்கும் பூச்சூட்டவேண்டும்; இதன் பிறகுதான் அடுப்பிலே தீ
மூட்டிச்
சமைக்கத் தொடங்க வேண்டும்; இப்படிச் செய்யும்
இல்லங்களில்தான் நன்மை
நிறைந்திருக்கும்’’.
(பா.46)
குடித்தனம் பண்ணும் பெண்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது
இச்செய்யுள்.
‘‘தலையிலே தடவிக்கொண்ட எண்ணெயால் வேறு எவ்வுறுப்பையும்
தொடக்கூடாது.
பிறர் கட்டிக்கழித்த
அழுக்குத் துணியையும் தொடக்கூடாது.
எவ்வளவு அவரசமானாலும்
பிறர் தரித்த செருப்பை மாட்டிக் கொண்டு
நடத்தல்
கூடாது.’’
(பா.12)
இவ்வாறு கூறுகிறது ஒரு செய்யுள், சுகாதாரத்தை வலியுறுத்தும் சிறந்த
செய்யுள் இது.
தலையிலே தடவிக்கொண்ட
எண்ணெயை வழித்து எந்த இடத்தில்
தடவிக்கொண்டாலும் சுகாதாரக் கேடுதான்.
|