2.திணைமொழி ஐம்பது
நூலின் அமைப்பு
ஐந்து திணைகளைப்பற்றிக்
கூறும் ஐம்பது பாடல்கள் அடங்கிய நூல்
இது. இதற்கே
திணைமொழி ஐம்பது என்று பெயர்
இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார் என்பவர். இவர்
தந்தையார் பெயர்
சாத்தந்தையார்.
இதைத் தவிர இவருடைய வரலாறு வேறு
எதுவும் தெரியவில்லை.
ஐந்திணைகளைப் பற்றிக் கூறும் மற்ற நூல்களைக் காட்டிலும்
இதற்கொரு தனிச் சிறப்பு
உண்டு.
இந்நூலிலே ஐந்திணைகளையும்
வரிசையாக அமைத்திருக்கும் முறை சிறந்ததாகும்.
முதலில் குறிஞ்சித்திணை; குறிஞ்சி நிலத்தில்தான் காதலனும் காதலியும்
முதல்
முதலாகச் சந்திப்பார்கள்.
அவர்களிடம் காதல் பிறக்கும்;
மணமக்களாவதென்று உறுதி
செய்து கொள்ளுவார்கள்.
இரண்டாவது பாலைத்திணை; இது காதலன் காதலியை விட்டுப்
பிரிவதைப்பற்றிப்
பேசுவது. காதலன்,
மணம் புரிவதற்கு முன்போ மணம்
புரிந்துகொண்ட பிறகோ பொருள்
தேடப் பிரிவான். அவளை அவன்
மணம்புரிவதற்கு முன்பே அவள் பெற்றோர் அறியாமல்
தன்னுடன் அழைத்துச் செல்வான். இவ்வாறு
பிரிவை உணர்த்துவதே
பாலைத்திணையாகும்.
|