மூன்றாவது முல்லைத்திணை; காதலன் பிரிந்ததனால் வரும் துன்பத்தைப்
பொறுத்துக்
கொண்டிருத்தல்.
தன் உள்ளத்திலே எவ்வளவு துயரம்
பெருகினாலும் அதை
அடக்கிக்கொண்டு காதலன் வருகையை
எதிர்பார்த்திருப்பாள்
கற்புள்ள காதலி. இந்த
நிகழ்ச்சியை உரைப்பதே
முல்லைத்திணை.
நான்காவது
மருதத்திணை; இத்திணையிலே இல்லறம் நடத்தும் காதலன்
காதலிகளுக்குள் நிகழும் ஊடல் கூறப்படும்.
எந்தெந்தக் காரணங்களினால்
அவர்களுக்குள்
ஊடல் தோன்றுகின்றது என்றெல்லாம் சொல்லப்படும்.
ஐந்தாவது நெய்தல் திணை; காதலன்
பிரிவுக்காகக் காதலி வருந்துதல்,
தன்
துன்பத்தைக் காதலி வெளிப்படையாகக் கூறுவாள்.
இவைகளே ஐந்திணை ஒழுக்கங்கள்.
இவற்றைச் சுருக்கமாகக் கூறினால்,
கூடல்,பிரிதல்,
இருத்தல், ஊடல், இரங்கல் என்று கூறிவிடலாம்.
மேலே காட்டிய வரிசைப்படியே
இந்நூலில் ஐந்திணைகளும்
அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு திணையைப்பற்றியும் பத்துப்பத்து
வெண்பாக்கள்
பாடப்பட்டிருக்கின்றன.
இவ்வெண்பாக்கள் படிப்பதற்கு
இனிமையானவை; எளிமையானவை; அழகிய கற்பனைகள்
அமைந்தவை. அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களிலே இது
ஒரு சிறந்த
நூல்.
பாட்டின் சிறப்பு
இந்நூற் செய்யுள்களின் சிறப்புக்குச் சில உதாரணங்களைக்
காண்போம்.
ஒரு காதலனும், காதலியும்,
கள்ள நட்புகொண்டு வாழ்கின்றனர்.
இதற்குக் களவு
மணம் என்று பெயர். கள்ள
|